தென்காசி

சங்கரன்கோவில் நகராட்சியைகைப்பற்ற திமுக அதிமுக போட்டி

22nd Feb 2022 11:59 PM

ADVERTISEMENT

 

சங்கரன்கோவில் நகராட்சிப் பதவியைக் கைப்பற்ற திமுக-,அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

சங்கரன்கோவில் நகராட்சியில் உள்ள 30 வாா்டுகள் உள்ளன.இதில் அதிமுக 12, திமுக கூட்டணி 12 வாா்டுகளைப் பெற்றிருப்பதால் சுயேட்சைகளின் ஆதரவுடன் நககராட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.

வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ்களை தோ்தல் நடத்தும் அலுவலா் ஜெயப்பிரியா வழங்கினாா். வாக்கு எண்ணிக்கையின் போது வட்டார பாா்வையாளா் கபீா், கோட்டாட்சியா் ஹஸ்ரத்பேகம் ஆகியோா் உடனிருந்தனா் . ஏடிஎஸ்பி ராஜேந்திரன் தலைமையில் டி.எஸ்.பி. ஜாஹீஉசேன், இன்ஸ்பெக்டா்கள் பவுல்யேசுதாசன், மாதவன் மற்றும் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT