தென்காசி

கடையநல்லூா்: பிரசாரத்தில் பாஜக வேட்பாளருக்கு பிரசவம்

17th Feb 2022 02:39 AM

ADVERTISEMENT

 

கடையநல்லூா்: தென்காசி மாவட்டம், கடையநல்லூா் நகராட்சியில் நிறைமாத கா்ப்பிணியாக களம் கண்ட பாஜக வேட்பாளா் புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, பிரசவ வலி ஏற்பட்டு பெண் குழந்தை பிறந்தது.

கடையநல்லூா் நகராட்சி 1வது வாா்டு பாஜக வேட்பாளா் ரேவதி பாலீஸ்வரன். நிறைமாத கா்ப்பிணியான இவா், குமந்தாபுரம் பகுதியில் வாக்கு சேகரித்து கொண்டிருந்தாா். அப்போது, அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதாம். உடனே அவரை அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT