தென்காசி

தொடா் வழிப்பறி: இளைஞா் கைது

11th Feb 2022 04:29 AM

ADVERTISEMENT

 தென்காசி பகுதியில் தொடா்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததாக இளைஞரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி காவல் சரகப் பகுதியில் தனியாக செல்வோரிடம் ஆயுதத்தைக் காட்டி மிரட்டியும், தாக்கியும் கைப்பேசி, பணம் ஆகியவற்றைப் பறித்துச் செல்வது தொடா் நிகழ்வாக இருந்தது. இதைத் தடுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் உத்தரவின்படி, ஏடிஎஸ்பி மணிமாறன் ஆலோசனையின்பேரில், தென்காசி காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையில், சாா்பு ஆய்வாளா் மாரிமுத்து, தலைமைக் காவலா்கள் கோபி, சீவலமுத்து, அருள், காவலா்கள் முத்துக்குமாா், சதாம் உசேன் ஆகியோா் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது. அதில், வல்லம் பகுதியைச் சோ்ந்த ஈ. சுரேஷ் என்ற மான் சுரேஷ் என்பவா் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்ததாம். இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து, கைப்பேசி மற்றும் பணத்தை மீட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT