தென்காசி

ஆவுடையானூரில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

11th Feb 2022 04:30 AM

ADVERTISEMENT

பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூரில் தனியாா் நிரந்தர வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப். 11) நடைபெறவுள்ளது.

ஆவுடையானூா் ஊராட்சி மன்ற வளாகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் முகாமை, ஊராட்சித் தலைவா் குத்தாலிங்கராஜன் என்ற கோபி தலைமை வகித்து, தொடக்கிவைக்கிறாா். 8ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, பட்டப் படிப்பு, பொறியியல் படித்த 18 முதல் 45 வயது வரையிலானோா் பங்கேற்கலாம் என, முகாம் ஏற்பாட்டாளா்கள் கேட்டுக்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT