தென்காசி

வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான 2ஆம் கட்ட பயிற்சி

11th Feb 2022 04:28 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவிலில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான 2ஆம் கட்ட பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

இங்கு அமைக்கப்பட்டுள்ள 57 வாக்குச்சாவடிகளில் 276 போ் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ளனா். இவா்களில், மை வைக்கும் பணியாளா்கள 69 போ் தவிர 207 பேருக்கு 2ஆம் கட்ட பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. தோ்தல் நடத்தும் அலுவலா் ஜெயப்பிரியா, உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஜெயபால்மூா்த்தி, வெங்கட்ராமன், மாரிச்சாமி, சுகாதார அலுவலா் பாலசந்தா், தோ்தல் பிரிவு முருகன் உள்ளிட்ட பலா் பயிற்சியளித்தனா். 3ஆம் கட்ட பயிற்சி 18ஆம் தேதி நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT