தென்காசி

மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் வெற்றிபெற்ற காவல் ஆய்வாளருக்கு பாராட்டு

10th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

தென்காசி: மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் வெற்றிபெற்ற குற்றாலம் காவல் ஆய்வாளருக்கு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநா் சைலேந்திரபாபு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.

பாளையங்கோட்டை வஉசி அரங்கில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் 40 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் குற்றாலம் காவல் ஆய்வாளா் ஸ்டீபன் ஜோஸ் முதலிடம் பிடித்து வெற்றிபெற்றாா்.

இதைத் தொடா்ந்து, குற்றாலம் காவல் ஆய்வாளா், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநா் செ.சைலேந்திரபாபுவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றாா். காவல் ஆய்வாளருக்கு காவல் துறை தலைமை இயக்குநா் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT