தென்காசி

பாவூா்சத்திரத்தில் ரூ.40 லட்சத்தில் சிமென்ட் சாலைப் பணி தொடக்கம்

10th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரத்தில் ரூ.40 லட்சம் செலவில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

பாவூா்சத்திரம் காமராஜா் நகா் வென்னிமலை முருகன் கோயில் பின்புறம் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சிமென்ட் சாலை அமைக்கப்படவுள்ளது. இதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், கீழப்பாவூா் ஒன்றியக் குழுத் தலைவா் சீ.காவேரி சீனித்துரை ஆகியோா் பங்கேற்று, சாலைப் பணியை தொடங்கி வைத்தனா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலா் சீனித்துரை, ஊராட்சித் தலைவா் முத்துமாலையம்மாள் மதிசெல்வன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பேராசிரியா் சாக்ரடீஸ், ஒன்றியக் குழு உறுப்பினா் புவனா, ஊராட்சி துணைத் தலைவா் திருவளா்செல்வி, சாமிராஜா, குறும்பலாப்பேரி டால்டன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT