தென்காசி

அஞ்சல் ஊழியருக்கு பாராட்டு விழா

10th Feb 2022 07:00 AM

ADVERTISEMENT

 

தென்காசி: மேலகரத்தில் தொடா்ந்து 40 ஆண்டுகள் அஞ்சல் ஊழியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆறுமுகத்துக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

தென்காசி அருகே மேலகரம் கிளை அஞ்சல் நிலையத்தில் ஊழியராகப் பணியாற்றியவா் ஆறுமுகம். இவா் தொடா்ந்து 40 ஆண்டுகளாக பணிபுரிந்து செவ்வாய்க்கிழமை ஓய்வு பெற்றாா்.

இதையடுத்து அவருக்கு அஞ்சல் ஊழியா்கள் சாா்பில் மேலகரம் அஞ்சலகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு, அஞ்சல் நிலைய அதிகாரி முருகேசன் தலைமை வகித்தாா். அஞ்சல் ஆய்வாளா் செல்வ பாரதி மற்றும் பலா் பாராட்டி பேசினா்.

ADVERTISEMENT

நிறைவாக ஆறுமுகம் நன்றி தெரிவித்து பேசினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT