தென்காசி

எறிபந்து போட்டி: ஸ்ரீகலைவாணி மெட்ரிக் பள்ளி மாநில அளவில் 2-ஆம் இடம்

30th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மாநில அளவிலான எறிபந்துப் போட்டியில் 2 ஆம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் இப் போட்டி 3 நாள்கள் நடைபெற்றது. இதில் 38 அணிகள் பங்கேற்றன.

இதில் திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மிக மூத்தோா் பிரிவில் மாநில அளவில் 2 ஆம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனா்.வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி முதல்வா் வி.பொன்னழகன், உடற்கல்வி ஆசிரியா்கள், ஆசிரியா்கள் மற்றும் ஊா் பொதுமக்கள் பாராட்டினா்.                                                

ADVERTISEMENT
ADVERTISEMENT