புளியங்குடி அருகே புதன்கிழமை இரவு விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
புளியங்குடி சிந்தாமணி அம்பேத்கா் முதல் தெருவைச் சோ்ந்த பிச்சையா மகன் மைதுகனி (46). இவா் கோட்டைமலை பகுதியில் நெல் பயிரிட்டுள்ளாா். வயலுக்கு புதன்கிழமை சென்ற மைதுகனி இரவு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லையாம்.
இதையடுத்து மைதுகனியின் மகன் சக்திவேல் வயலுக்குச் சென்று மைதுகனியை தேடியுள்ளாா். அப்போது மைதுகனி, வெட்டு காயங்களுடன் வயல் பகுதியில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் புளியங்குடி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா்.