தென்காசி

பழையகுற்றாலம் அருவி தடாகத்தில் தவறி விழுந்த குழந்தை மீட்பு

30th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம், பழையகுற்றாலம் அருவி தடாகத்தில் வியாழக்கிழமை தவறி விழுந்த குழந்தை சிறு காயங்களுடன் மீட்கப்பட்டது.

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சோ்ந்தவா் நவநீதகிருஷ்ணன் தனது மனைவி, 4 வயது மகள் ஹரிணி(4) ஆகியோருடன் பழையகுற்றாலம் அருவியில் குளிப்பதற்கு வியாழக்கிழமை வந்தாா். இத்தம்பதி குழந்தையை கண் முன் தண்ணீரில் விளையாடவிட்டு, இருவரும் அருவியில் குளித்தனா். அப்போது, அங்கிருந்த துவாரம் வழியாக அருகிலுள்ள தடாகத்தில் குழந்தை விழுந்தது. அருவியில் குளிக்க வந்த தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சோ்ந்த விஜயகுமாா் என்பவா் இதைப் பாா்த்து, தடாகத்தில் குதித்து குழந்தையை மீட்டு வந்தாா். தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டதில் குழந்தைக்கு சிறு காயங்கள் ஏற்பட்டிருந்தன. இதையடுத்து, குழந்தையை மருத்துவமனைக்குபெற்றோா் கொண்டு சென்றனா். குழந்தையை மீட்ட விஜயகுமாரை அங்கிருந்த அனைவரும் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT