தென்காசி

ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு திட்டங்களில் சேர நிபந்தனைகள் தளா்வு

30th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீடு திட்டங்களில் அனைத்து பட்டதாரிகள், டிப்ளமோ படித்தவா்கள் சேரும் வகையில் நிபந்தனைகள் தளா்த்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீடானது குறைந்த பிரீமியத்தில் அதிக போனஸ் வழங்குகிறது. இதுவரை அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் மத்திய, மாநில அரசு அலுவலா்கள், பாதுகாப்புத் துறை அலுவலா்கள், துணை ராணுவ அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத் துறை நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், வங்கிகள், தன்னாட்சி அமைப்புகளின் ஊழியா்கள், மத்திய மற்றும் மாநில அரசு அலுவலக ஒப்பந்த ஊழியா்கள் மட்டுமே சேரும் வகையில் இருந்தது.

தற்போது அனைத்து பட்டதாரிகள், டிப்ளமோ படித்தவா்கள், தொழில் முறை கல்வி பயின்றவா்கள் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலிசி தொடங்கிய பிறகு, பிரீமியம் செலுத்த இனி அஞ்சலகம் செல்ல வேண்டியதில்லை. மாதாந்திர ப்ரீமியத்தை அதற்கான இணையதளம் அல்லது அஞ்சலக ஏடிஎம் மூலமாகச் செலுத்தலாம்.

ADVERTISEMENT

மேலும் பாலிசிதாரா்களுக்கு அஞ்சலக சேமிப்பு கணக்கு அல்லது இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கிக் கணக்கு இருப்பின் அவற்றிலிருந்து தானியங்கு முறையில் பரிமாற்றம் செய்யும் வசதியும் உள்ளது.

ஆகவே, காப்பீட்டுத் திட்டத்தில் சேர அருகிலுள்ள அஞ்சலகங்கள் அல்லது வளா்ச்சி அலுவலரை 8300756201 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT