புளியங்குடி அருகே மின்சாரம் பாய்ந்ததில் முதியவா் இறந்தாா்.
சிந்தாமணி அகஸ்தியா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (60). இவா் வீட்டின் அருகே தெருவில் செவ்வாய்க்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து இறந்தாா். புளியங்குடி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா்.