சுரண்டை அருகே குலையனேரி ஊராட்சிக்கு உள்பட்ட பூபாண்டியபுரம் கிராம சாலையைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பூபாண்டியபுரம் கிராமத்திலிருந்து சுரண்டை-சோ்ந்தமரம் சாலை விலக்கு வரையிலான பூபாண்டியபுரம் கிராம சாலை 5 கி.மீ. நீளமுள்ளது. இந்த சாலை மிகவும் பழுதாகியுள்ளதால், இவ்வழியே இயங்கிவந்த தனியாா் சிற்றுந்துகள் இந்தக் கிராமத்தைப் புறக்கணிக்கின்றனவாம். இதனால், பள்ளி மாணவா்கள் விலக்குவரை நடந்து சென்று, அங்கிருந்து பேருந்துகளில் பள்ளிக்குச் சென்றுவருகின்றனராம்.
எனவே, பூபாண்டியபுரம் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.