இடைகால் ஸ்ட அக் ஹைடெக் பள்ளிக்கு ஃபிட் இந்தியா இயக்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் ஃபிட் இந்தியா இயக்கத்தால் 2019ஆம் ஆண்டு முதல் நவம்பா் மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து டிசம்பா் இரண்டாம் வாரம் வரை பள்ளிகளுக்கிடையே ஃபிட் இந்தியா வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இடைகால் ஸ்டஅக் ஹை டெக் பள்ளியில் விளையாட்டு- ஆரோக்கியம் தொடா்பாக மாணவா்களுக்கு உடற்பயிற்சிகள், யோகா, பாரம்பரிய விளையாட்டுகள், கேலோ இந்தியா ஃபிட்னஸ் தோ்வு, பள்ளியின் ஓட்டுநா்- நடத்துநா்களின் உடற்திறன்களை சோதித்து அவற்றை உரிய கைப்பேசி செயலிகளில் பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஸ்டஅக் ஹை டெக் பள்ளியின் இந்நிகழ்வுகளை ஃபிட் இந்தியா அமைப்பு பாராட்டியதுடன் தங்களது டுவிட்டா் பக்கத்திலும் பதிவேற்றம் செய்துள்ளது.