தென்காசி

சுரண்டை அருகே கால்நடை மருத்துவ முகாம்

11th Dec 2022 05:51 AM

ADVERTISEMENT

சுரண்டை அருகேயுள்ள லட்சுமிபுரத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

அச்சங்குட்டம் ஊராட்சித் தலைவா் முருகேஸ்வரி தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு உறுப்பினா் முரளிராஜா முன்னிலை வகித்தாா்.

தென்காசி எம்எல்ஏ சு. பழனிநாடாா் முகாமைத் தொடக்கிவைத்து, கால்நடை பராமரிப்பில் சிறந்த விவசாயிகளுக்கு பரிசு வழங்கிப் பேசினாா்.

கால்நடைகளுக்கு செயற்கைக் கருவூட்டல், குடற்புழு நீக்கம், பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

முன்னாள் ஊராட்சித் தலைவா் முருகேசன், காங்கிரஸ் நிா்வாகிகள் கணேசன், கந்தையா, பிரபாகா், தெய்வேந்திரன், விவசாயிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT