தென்காசி

ஆவுடையானூா் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

11th Dec 2022 05:48 AM

ADVERTISEMENT

பாவூா்சத்திரம் அருகே ஆவுடையானூரில் புனித அருளப்பா் மேல்நிலைப் பள்ளியில் சமய நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

புனித அருளப்பா் மேல்நிலைப் பள்ளி, நா்சரி மற்றும் தொடக்கப் பள்ளி இணைந்து நடத்திய விழாவுக்கு பள்ளி நிா்வாகி மோயீசன் அடிகளாா் தலைமை வகித்தாா். மேட்டூா் சேகரகுரு ஜோயல்சாம், பேராசிரியா் டோம்னிக் வின்சென்ட், தொழிலதிபா் மஸ்தான் நசீா், முன்னாள் தலைமையாசிரியா் அருள் செல்வராஜ் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா்.

பள்ளி வளாகத்தில் குடில், ஸ்டாா் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாணவா்-மாணவியா் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து, கிறிஸ்து பிறப்பு நடனம், நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடத்தினா். தலைமையாசிரியா் அந்தோணி அருள் பிரதீப் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT