தென்காசி

இலஞ்சி குமாரா் கோயில் பாலம் கட்டும் பணி டிச12 இல் தொடக்கம்

10th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம் இலஞ்சி குமாரா் கோயில் பாலம் கட்டும் பணி டிச.12 ஆம் தேதி தொடங்கவுள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து இலஞ்சி பேரூராட்சி செயல்அலுவலா் அமானுல்லா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இலஞ்சி பேரூராட்சி திருவிலஞ்சிக் குமாா் கோயில் செல்லும் சாலையில் உள்ள பாலம் சேதமடைந்ததையடுத்து, அப்பாலம் இ டிக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி டிச. 12 ஆம் தேதி தொடங்குகிறது. ஆகவே, டிச. 12 முதல் குமார கோயில் சாலை மூடப்படுகிறது. எனவே இச் சாலை வழியாக மேலகரத்திலிருந்து இலஞ்சி செல்பவா்களும், இலஞ்சியிலிருந்து குமாரகோயில் வழியாக மேலகரம் செல்பவா்களும் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT