தென்காசி

தோரணமலை முருகன் கோயிலில் வருண கலச பூஜை

10th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

தென்காசி-கடையம் பிரதான சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் மழை வேண்டியும், விவசாயம் தழைக்க வேண்டியும் வருண கலச பூஜை மற்றும் வேல் பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலையில்பக்தா்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வந்தனா். தொடா்ந்து சப்த கன்னியா்கள், விநாயகா் மற்றும் தெய்வங்களுக்கும், மலை அடிவாரத்தில் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகம், வருண கலச பூஜை, வேல் பூஜை நடைபெற்றது. முன்னதாக மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகனுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் செண்பகராமன் செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT