தென்காசி

ஆலங்குளம் மகளிா் கல்லூரி கட்டடப் பணி: எம்எல்ஏ ஆய்வு

10th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆலங்குளத்தில் கட்டப்படும், அரசு மகளிா் கலை மற்றும் றிவியல் கல்லூரிக்கான புதிய கட்டடப் பணியை ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆலங்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள கட்டடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரிக்கு ரூ.11.33 கோடியில் புதிய கட்டடப்படுகிறது. இதற்கான கட்டுமானப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் மனோஜ் பாண்டியன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

மாவட்ட செயலா் கணபதி, பொதுக் குழு உறுப்பினா் ராதா, நகர செயலா் சுபாஸ் சந்திரபோஸ், கணேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT