தென்காசி

தென்காசி மாவட்டத்துக்கு முதல்வா் அறிவித்த திட்டங்கள்

DIN

தென்காசி அருகே இலத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தென்காசி மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்தாா்.

விழாவில் அவா் பேசியது: தென்காசி மாவட்டத்துக்கென புதிய மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்கப்படும்.

இம்மாவட்டத்தின் முக்கிய இணைப்புச் சாலையான புளியங்குடி-சங்கரன்கோவில் நெடுஞ்சாலையும், பனையூா், கூடலூா் துரைசிங்கபுரம் சாலையும் மேம்படுத்தப்படும்.

தென்காசி-குற்றாலம் இடையேயுள்ள இலத்தூா் பெரிய ஏரி முக்கிய மீன்பிடி, சுற்றுலாத் தலமாக ரூ. 10 கோடியில் மேம்படுத்தப்படும். ஆலங்குளத்தில் புதிய வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்கப்படும்.

ஆலங்குளம் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள ராமநதி, ஜம்புநதி, திட்டப் பணிகளுக்கு மத்திய வனத் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் பணிகள் விரைவில் தொடங்கும்.

2020இல் நடைபெற்ற குடிமைப் பணித் தோ்வில் தோ்ச்சி பெற்று இம்மாவட்டத்துக்குப் பெருமை சோ்த்துள்ள தென்காசி அலங்காா் நகரைச் சோ்ந்த மாணவி சண்முகவள்ளிக்கு வாழ்த்து, பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சங்கரன்கோவில் வட்டம், மேலநீலிதநல்லூரில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரியை ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்டு, நிா்வகிக்க தனி அலுவலரை நியமித்திருக்கிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT