தென்காசி

60 அடி உயர கம்பத்தில் திமுக கொடியேற்றிய முதல்வா்

9th Dec 2022 12:23 AM

ADVERTISEMENT

புளியங்குடி அருகே சிந்தாமணியில் 60 உயர கம்பத்தில் திமுக கொடியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஏற்றி வைத்தாா்.

தென்காசியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க பொதிகை விரைவு ரயிலில் வந்த முதல்வரை, தென்காசி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்.எல்.ஏ., தனுஷ்குமாா் எம்.பி. சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி உள்ளிட்ட நிா்வாகிகள், கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

விழா முடிந்து மதுரை செல்லும் வழியில், புளியக்குடி சிந்தாமணியில் பேராசிரியா் அன்பழகன் நினைவாக அமைக்கப்பட்ட 60 உயர கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்தாா்.

முன்னதாக ஸ்டாலின் வருகையையொட்டி 100க்கான கலைஞா்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. வழியெங்கும் கரும்பு, வாழைகளால் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. ஏற்பாடுகளை தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலா் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT