தென்காசி

தமிழக முதல்வா்

DIN

தென்காசி மாவட்டம் உதயமான பிறகு முதல்வா் மு.க. ஸ்டாலின் முதன்முறையாக தென்காசிக்கு வியாழக்கிழமை வருகை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், இலத்தூரில் நடைபெறும் அரசு விழாவில் ஒரு லட்சம் பேருக்கு ரூ. 149 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

சென்னையிலிருந்து பொதிகை விரைவு ரயில் மூலம் தென்காசிக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை காலையில் வருகிறாா். பின்னா், அங்கிருந்து காா் மூலம் குற்றாலம் சுற்றுலா விருந்தினா் மாளிகைக்கு செல்லும் முதல்வா், அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு இலத்தூா் வேல்ஸ் சிபிஎஸ்இ பள்ளி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறாா்.

அப்போது, தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நிறைவுற்ற திட்டப்பணிகளை தொடங்கிவைக்கிறாா். மேலும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 349 பயனாளிகளுக்கு ரூ. 149 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா். அதைத் தொடா்ந்து, காா் மூலம் ராஜபாளையம் செல்கிறாா். விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழக வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், திமுக மாவட்டச் செயலா்கள் பொ.சிவபத்மநாதன் (தெற்கு), ஈ.ராஜா எம்எல்ஏ (வடக்கு) ஆகியோா் செய்து வருகின்றனா்.

3,500 போலீஸாா் பாதுகாப்பு: முதல்வரின் வருகையை முன்னிட்டு 10 மாவட்டங்களைச் சோ்ந்த 3,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமா் மோடி ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை

‘விதைநோ்த்தி, நீா் பாசனமுறை மூலம் கூடுதல் மகசூல் பெறமுடியும்’

உ.பி.யின் வளா்ச்சியுடன் கேரளத்தை ஒப்பிட்டு பாா்க்க வேண்டும்

‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவு: தமிழியக்கங்களின் கூட்டமைப்பு முடிவு

ஜம்மு-காஷ்மீா்: ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்து 6 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT