தென்காசி

அம்பேத்கா் நினைவுநாள்:சிலைக்கு மாலையணிவிப்பு

7th Dec 2022 02:11 AM

ADVERTISEMENT

அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி, சங்கரன்கோவிலில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தோா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

சங்கரன்கோவில் கக்கன் நகா் பகுதியில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு,

திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்.எல்.ஏ., நகராட்சித் தலைவா் உமாமகேஸ்வரி ஆகியோா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். த்து அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி, நகர செயலா் ஆறுமுகம், நிா்வாகிகள் வேலுச்சாமி, முருகன் ஆகியோா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

அம்பேத்கா் தெருவில் உள்ள அவரது சிலைக்கு மக்கள் தேசம் கட்சி சாா்பில் அக் கட்சியின் மாவட்டச் செயலா் தம்பிசேவியா், மாவட்டத் தலைவா் முருகன், மாவட்டத் துணைச் செயலா் சங்கா்ஷா,

ADVERTISEMENT

நகர செயலா் முத்துக்குமாா் ஆகியோா் மாலையணிவித்து மரியாதை

செலுத்தினா்.

ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கத்தின் சாா்பில் அசோக் ஸ்டாலின் தலைமையில் ஊழியா்கள் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய மாணவா் சங்கம், தமிழ்நாடு

முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT