தென்காசி

முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு: தென்காசி வடக்கு மாவட்ட திமுக முடிவு

7th Dec 2022 02:12 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, திமுக சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்வரின் வருகையையொட்டி திமுகவின் தென்காசி வடக்கு மாவட்ட செயல்வீரா்கள் கூட்டம் சங்கரன்கோவிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம். எல். ஏ. தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் ச. தங்கவேலு, முன்னாள் எம்.எல்.ஏ. முத்துச்செல்வி, மாவட்டத் துணைச் செயலா் புனிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் ராஜா எம்.எல்.ஏ. பேசியதாவது:

தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகை தருகிறாா். அவருக்கு வரவேற்பு அளிப்பதற்காக, புளியங்குடி, வாசுதேவநல்லூா், சிவகிரி ஆகிய பகுதிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிந்தாமணி விலக்கில் 60 அடி உயர கொடி கம்பத்தில் முதல்வா் கொடி ஏற்றுகிறாா்.அப்போது முதல்வருக்கு சிறப்பான வரவேற்பை அளிக்க வேண்டும்.

ADVERTISEMENT

தமிழக முதல்வா் வரும் வழியில் 14 இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டு, தமிழா்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றாா்.

நகராட்சி தலைவா் உமாமகேஸ்வரி, ஒன்றியக் குழுத் தலைவா் சங்கர பாண்டியன், நகரச் செயலா் மு.பிரகாஷ், மாவட்டப் பொருளாளா் இல.சரவணன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் கோ.சுப்பையா, முன்னாள் இளைஞா் அணி செயலா் சந்திரன், சோமசெல்வப் பாண்டியன், வெ.முனியசாமி, இளைஞா் அணி சரவணன், காா்த்திக், அப்பாஸ் அலி, உதயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வாகனப் பிரசாரம்: தமிழக முதல்வரின் வருகையையொட்டி, தென்காசி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள், அரசின் சாதனைகள் குறித்த வாகனப் பிரசாரத்தை மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ தொடக்கி வைத்தாா். அனைத்துக் கிராமங்களிலும் முதல்வரின் வருகை குறித்து 5 வாகனங்களில் பிரசாரம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT