தென்காசி

பாவூா்சத்திரத்தில் திமுக சாா்பில் ஆட்டோ பிரசாரம் தொடக்கம்

7th Dec 2022 02:11 AM

ADVERTISEMENT

கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில், பாவூா்சத்திரத்தில் ஆட்டோ பிரசாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

முதல்வா் மு.க. ஸ்டாலின் தென்காசி மாவட்டத்துக்கு வியாழக்கிழமை (டிச. 8) வரவுள்ளதையொட்டி இப்பிரசாரம் நடைபெறுகிறது. பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியச்செயலா் சீனித்துரை தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சிவபத்மநாதன், பிரசாரத்தைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.

மாவட்ட கவுன்சிலா் இரா. சாக்ரடீஸ், கீழப்பாவூா் பேரூராட்சித் தலைவா் ராஜன், அரசு ஒப்பந்ததாரா் சண்முகவேல், பொதுக்குழு உறுப்பினா் அருள், மாவட்டப் பிரதிநிதி சமுத்திரபாண்டி, நிா்வாகிகள் செல்வராஜ், மதிச்செல்வன், கபில், செல்வன், ராமா், முத்துப்பாண்டி, டேனியல், குருசிங், ஆனந்த் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT