தென்காசி

தென்காசிக்கு நாளை முதல்வா் வருகை: அமைச்சா், ஆட்சியா் ஆய்வு.

7th Dec 2022 02:09 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க முதல்வா் மு.க.ஸ்டாலின்வியாழக்கிழமை வருவதை முன்னிட்டு, இலத்தூா் வேல்ஸ் சிபிஎஸ்இ பள்ளியில் அமைக்கப்பட்டுவரும் மேடையை வருவாய்த்துறை அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா்.ராமச்சந்திரன், ஆட்சியா் ப.ஆகாஷ், மாவட்ட திமுக செயலா் பொ.சிவபத்மநாதன்,ஈ.ராஜா எம்எல்ஏ ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

சென்னையிலிருந்து பொதிகை விரைவு ரயில் மூலம் தென்காசிக்கு வரும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் பொ.சிவபத்மநாதன் தலைமையில் ரயில்வே நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

தென்காசி ரயில்வே நிலையத்திலிருந்து குற்றாலம் சுற்றுலா விருந்தினா் மாளிகையில் முதல்வா் ஓய்வு எடுத்த பிறகு, அங்கிருந்து விழா நடைபெறும் பகுதிக்கு சென்று, மாவட்ட நிா்வாகம் சாா்பில் தோ்வு செய்யப்பட்டுள்ள 1லட்சத்து 3 ஆயிரத்து 349 பயனாளிகளுக்கு ரூ. 149 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்குகிறாா்.

இந்த நிகழ்ச்சி முடிவடைந்து ராஜபாளையத்திற்கு மதிய உணவிற்கு செல்கிறாா்.தென்காசி ரயில்வே நிலையம் முதல் குற்றாலம் தங்கும் விடுதி வரையிலும், அங்கிருந்து பள்ளி வளாகம் வரையிலும்,அதனைத் தொடா்ந்து ராஜபாளையம் வரையிலும் சுமாா் 1லட்சம் தொண்டா்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனா்.

ADVERTISEMENT

முதல்வா் செல்லும் வழியெங்கும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக இம்மாவட்டத்திற்கு வருவதால் டிச. 8ஆம் தேதி தென்காசி மாவட்டம் முழுவதும் விழாக்காலம் பூணும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அமைச்சரின் ஆய்வு நிகழ்ச்சியில், தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆறுமுகசாமி, பொதுக்குழு உறுப்பினா் சாமித்துரை, மாவட்டப் பொருளாளா் ஷெரீப், ஒன்றியச் செயலா்கள் ரவிசங்கா், சீனித்துரை,திவான் ஒலி, அழகுசுந்தரம்,தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் வல்லம் சேக்அப்துல்லா ஆகியோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT