தென்காசி

கடையநல்லூா் எம்எல்ஏ அலுவலகத்தில் அம்பேத்கா் நினைவு நாள்

7th Dec 2022 02:13 AM

ADVERTISEMENT

கடையநல்லூா் எம்எல்ஏ அலுவலகத்தில் அம்பேத்கரின் நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

அலங்கரிக்கப்பட்ட அம்பேத்கரின் படத்துக்கு தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலரான கிருஷ்ணமுரளி எம்எல்ஏ மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.

மாவட்ட துணைச் செயலா் பொய்கை மாரியப்பன், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலா் சிவஆனந்த், கடையநல்லூா் நகரச் செயலா் எம்.கே. முருகன், முன்னாள் நகரச் செயலா் கிட்டுராஜா, சௌதி அரேபியா ஜெயலலிதா பேரவைச் செயலா் மைதீன், மாவட்ட மாணவரணி துணைச் செயலா் கருப்பையாதாஸ், நகர இளைஞரணிச் செயலா் ராஜேந்திரபிரசாத், மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் புகழேந்தி, நகர இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலா் பால்பாண்டி, நகர தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவா் கண்ணன், துணைச் செயலா் மாரியப்பன், தியாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT