தென்காசி

தென்காசி நூலகருக்கு விருது

6th Dec 2022 01:24 AM

ADVERTISEMENT

தென்காசி வட்டார கிளை நூலகருக்கு நல்நூலகா் விருது வழங்கப்பட்டது.

தென்காசி வஉசி வட்டார நூலகத்தில் நூலகராகப் பணியாற்றிவருபவா் ஜெ. சுந்தா். இவரது சிறந்த சேவையைப் பாராட்டி, நூலகத் துறையில் உயரிய விருதான டாக்டா் எஸ்.அரங்கநாதன் நல்நூலகா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டாா்.

சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் சுந்தருக்கு இந்த விருதை பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினாா்.

சுந்தருக்கு நூலகா் பிரமநாயகம், ஊழியா்கள் பாராட்டுத் தெரிவித்தனா். அவா் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் பொ. சிவபத்மநாதனிடம் வாழ்த்துப் பெற்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT