தென்காசி

ஆலங்குளம் அருகேவேன்-பைக் மோதல்:இளைஞா் பலி

6th Dec 2022 01:24 AM

ADVERTISEMENT

ஆலங்குளம் அருகே வேனும் பைக்கும் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா். அவரது நண்பா் காயமடைந்தாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள கடங்கனேரியைச் சோ்ந்த கண்ணன் மகன் சின்ராசு(27). இவா், தனது நண்பரான தென்காசி ஆய்க்குடி கனகா் மகன் சாரதி(22) என்பவருடன் பைக்கில் வி.கே.புதூா் சாலை வழியாக ஆய்க்குடி சென்றுகொண்டிருந்தாா். அப்போது, எதிரே ஆய்க்குடியிலிருந்து சுடலை என்பவா் ஓட்டி வந்த வேனும், இவா்களது பைக்கும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம். இதில், சின்ராசு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சாரதி பலத்த காயமடைந்தாா்.

இத்தகவல் அறிந்த ஊத்துமலை போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும், சாரதியை சிகிச்சைக்காகவும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து வேன் ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT