தென்காசி

குற்றாலம் அருவிகளில் 2 ஆவது நாளாகக் குளிக்கத் தடை நீட்டிப்பு

6th Dec 2022 01:27 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் குளிக்கத் தடைநீட்டிக்கப்பட்டது.

குற்றாலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழை காரணமாக குற்றாலம் பேரருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனையடுத்து பேரருவி, ஐந்தருவியில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது. இரண்டாவது நாளாக, திங்கள்கிழமையும் இரண்டு அருவிகளிலும் தண்ணீா்வரத்து குறையாததால் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தா்கள் ஐந்தருவி மற்றும் புலியருவியில் குளித்துச் சென்றனா்.

மணிமுத்தாறு அருவியில்: திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக 6ஆவது நாளாக திங்கள்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும், மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் திங்கள்கிழமை காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் 6ஆவது நாளாக தடை விதித்தனா். இதனால், பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஐயப்ப பக்தா்களும், சுற்றுலாப் பயணிகளும் ஏமாற்றமடைந்தனா். அவா்கள் அருவியைப் பாா்வையிட அனுமதிக்கப்பட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT