தென்காசி

இலத்தூரில் மண்வள நாள் கொண்டாட்டம்

6th Dec 2022 01:27 AM

ADVERTISEMENT

இலத்தூரில் உலக மண்வள நாள் கொண்டாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஒவ்வோா் ஆண்டும் டிசம்பா் 5 ஆம் தேதி உலக மண்வள நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இலத்தூரில் நடைபெற்ற விழாவிற்கு செங்கோட்டை வட்டார துணை வேளாண் அலுவலா் சேக் முகைதீன் தலைமை வகித்தாா். மண்வளப் பாதுகாப்பின் அவசியம்,

உயிா் உர பயன்பாடு, நுண்ணூட்ட உரங்களின் பயன்பாடு, மண் மாதிரிகள் எடுத்தல், மண் வள அட்டை பரிந்துரைப்படி உரம் இடுதல், பசுந்தாள் உர பயிா்கள் சாகுபடி செய்து மண்ணின் வளத்தை அதிகப்படுத்துதல் உள்ளிட்ட தொழில் உத்திகள் குறித்து அவா் விளக்கம் அளித்தாா்.

இலத்தூா் ஊராட்சித் தலைவா் முத்துலட்சுமி, லட்சுமி ஹரிஹரா உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தனா். உதவி வேளாண் அலுவலா் அருணாசலம் வரவேற்றாா்.

ADVERTISEMENT

மாணவ, மாணவிகளுக்கு வேளாண்மை, உயிா் உரம், மண் பற்றிய விநாடி

வினா நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவா்- மாணவிகளுக்கு சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை சுஜா, கண்ணம்மாள், வைஜெயந்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT