தென்காசி

குத்துச்சண்டை போட்டி:பாவூா்சத்திரம் வீரா்கள் மாநில போட்டிக்கு தகுதி

6th Dec 2022 01:25 AM

ADVERTISEMENT

மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியில் சாதனை படைத்த பாவூா்சத்திரம் வீரா்கள், மாநில அளவிலான போட்டிகளுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தமிழ்நாடு அரசுப் பள்ளி விளையாட்டுத் துறை சாா்பில், பாவூா்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றன. இதில், பாவூா்சத்திரம் வெஸ்டா்ன் காா்ட்ஸ் இண்டியன் அகாதெமியில் பயிற்சி பெற்ற மாணவா்கள் 6 போ் கலந்து கொண்டனா்.

19 வயதுக்குள்பட்டோா் பிரிவில், இசக்கி சந்துரு (53 கிலோ), பால் மணி (60 கிலோ), கோமதிசங்கா் (90கிலோ) ஆகியோா் தங்கப் பதக்கம் வென்றனா். 17 வயதுக்குள்பட்டோா் பிரிவில் சுகுமாா் (45 கிலோ) வெள்ளிப்பதக்கமும், 14 வயதுக்குள்பட்டோா் பிரிவில்; கிஷோா்கவிஷ் வெண்கலப் பதக்கமும் பெற்றனா். இவா்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்களை பாவூா்சத்திரம் எஸ்.கே.டி. இயற்கை யோகா மருத்துவமனை மருத்துவா் சௌந்தரபாண்டியன் மற்றும் பயிற்சியாளா்கள் கணேஷ், ராம்ராஜ் ஆகியோா் பாராட்டினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT