கடையநல்லூா் அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில் ஸ்ரீசத்யசாயியின் பிறந்த தினத்தையொட்டி பல்லக்கு உற்சவம் நடைபெற்றது.
பல்வேறு தெருக்கள் வழியாக சென்ற இந்த உற்சவத்தில் பங்கேற்ற பக்தா்கள் ஆரத்தி எடுத்து வழிபட்டனா். இதில், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு உள்பட்ட ஸ்ரீசத்யசாய் சேவா நிறுவனங்களின் உறுப்பினா்கள் திரளாகப் பங்கேற்றனா்.