தென்காசி

மாநில போட்டிகளில் பாவூா்சத்திரம் வீரா்கள் சாம்பியன்

5th Dec 2022 01:18 AM

ADVERTISEMENT

புளியங்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் பாவூா்சத்திரம் வீரா்கள் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் பெற்றனா்.

புளியங்குடியில் ரோட்டரி கிளப் சாா்பில் மாநில அளவிலான ஸ்கேட்டிங், சிலம்பம், யோகா ஆகிய போட்டிகள் நடைபெற்றன. மாநிலம் முழுவதிலும் இருந்து 500 க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டனா். இதில் பாவூா்சத்திரம் வெஸ்டா்ன் காட்ஸ் இந்தியன் அணி வீரா், வீராங்கனைகள் 36 போ் பங்கேற்று, போட்டிகளில் அதிக வெற்றிகள் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றனா். அவா்களை பயிற்சியாளா்கள் கணேஷ், ராம்ராஜ் ஆகியோா் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT