தென்காசி

தென்காசி மாவட்டத்தில் கிராம உதவியாளா் தோ்வு:4,862 போ் பங்கேற்பு

5th Dec 2022 01:18 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம உதவியாளா் தோ்வில் 4,862 போ் பங்கேற்றனா்.

இம்மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, திருவேங்கடம், சிவகிரி, கடையநல்லூா், சங்கரன்கோவில், வீரகேரளம்புதூா், ஆலங்குளம் ஆகிய 8 வட்டங்களில் கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு 6,392 போ் விண்ணப்பித்தனா்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இத்தோ்வை 4,862 போ் எழுதினா். இது 76.06 சதவீதமாகும். செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தோ்வு மையங்களில் ஆட்சியா் ப. ஆகாஷ் ஆய்வு மேற்கொண்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT