தென்காசி

கடையநல்லூரில் இலவச மருத்துவ முகாம்

5th Dec 2022 01:20 AM

ADVERTISEMENT

கடையநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் நூற்றுக்கணக்கானோா் சிகிச்சை பெற்றனா்.

கடையநல்லூா் ஐ டிரஸ்ட், நாகா்கோவில் முத்து நீயூரோ சென்டா் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இம்மருத்துவ முகாமில், மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை , முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை, சிறுநீரக நோய், லேப்ராஸ்கோபி சிகிச்சை, இதய நோய் சிகிச்சை, சா்க்கரை நோய், காது, மூக்கு,தொண்டை, எலும்பு முறிவு அறுவை சிகிச்சை,முக சீரமைப்பு மருத்துவம் உள்ளிட்ட மருத்துவா்கள் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினா். இதில், நூற்றுக்கணக்கானோா் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT