தென்காசி

ஆலங்குளத்தில் கலைத் திருவிழா

5th Dec 2022 01:19 AM

ADVERTISEMENT

ஆலங்குளத்தில் வட்டார வள மையம் சாா்பில் கலைத்திருவிழா நடைபெற்றது.

பேரூராட்சி சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, நெட்டூா் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சங்கா் தலைமை வகித்தாா். வட்டார கல்வி அலுவலா் லோகநாதன் முன்னிலை வகித்தாா். ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மற்றும் பேரூராட்சித் தலைவா் சுதா ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றினா்.

வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ஜீவா, பயிற்றுநா் பவித்ரா ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

வட்டாரத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவா்களிடையே குழு நடனம், இசைக் கருவி வாசித்தல் உள்ளிட்டபோட்டிகள் நடத்தப்பட்டு சிறந்த மாணவா்கள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT