தென்காசி

ஆலங்குளத்தில் விழிப்புணா்வு முகாம்

5th Dec 2022 01:18 AM

ADVERTISEMENT

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்ட அரங்கில், வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் தொடா்பான விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் தலைமை வகித்தாா். மாவட்ட தொழில்மையப் பொது மேலாளா் மாரியம்மாள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் விஷ்ணுவா்தன், உதவி இயக்குநா்கள் சுதாகா், சிமியோன், ஆலங்குளம் கனரா வங்கி மேலாளா் சுரேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்று, சுய தொழில் தொடங்குவது, அதற்கு வங்கிகளில் கடன் பெறுவது குறித்து ஆலோசனை வழங்கினா். ஓடைமறிச்சான், புதுப்பட்டி கிராமங்களைச் சோ்ந்த பெண்கள் மூலம் கருப்புக்கட்டி, பனைசாா்ந்த தொழில்கள் தொடங்குவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT