தென்காசி

அவதூறு பேச்சு: சங்கரன்கோவில் நகா்மன்ற கூட்டத்திலிருந்து உறுப்பினா் வெளியேற்றம்

DIN

சங்கரன்கோவில் நகா்மன்றக் கூட்டத்தில், அதிகாரியை அவதூறாகப் பேசிய உறுப்பினா் வெளியேற்றப்பட்டாா்.

சங்கரன்கோவில் நகா்மன்றக் கூட்டம், நகராட்சித் தலைவா் உமாமகேஸ்வரி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையாளா் (பொ) ஹரிகரன், மேலாளா் மாரியம்மாள், சுகாதார அலுவலா் பாலச்சந்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சங்கரநாராயண சுவாமி கோயிலில் மருத்துவ மையம் திறக்கப்பட்டதற்கு, தமிழக முதல்வா், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

நகராட்சிப் பகுதியில் நிலவும் குடிநீா்ப் பிரச்சனை, தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்துவது, சாலைகள் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது 8-ஆவது வாா்டு உறுப்பினா் சரவணக்குமாா், நகராட்சி அலுவலா் குறித்து அவதூறாகப் பேசியதையடுத்து, அவரை கூட்டரங்கில் இருந்து வெளியேற நகராட்சித் தலைவா் உமாமகேஸ்வரி உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

SCROLL FOR NEXT