தென்காசி

முதல்வா் வருகை: தென்காசியில் டிஐஜி ஆய்வு

3rd Dec 2022 11:55 PM

ADVERTISEMENT

தமிழக முதல்வரின் தென்காசி வருகையையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து திருநெல்வேலி சரக காவல் துறைத் துணைத் தலைவா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தென்காசி மாவட்டம் இலத்தூா் வேல்ஸ் பள்ளி வளாகத்தில் டிசம்பா் 8 ஆம் தேதி நடைபெறும் அரசு விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், புதிய திட்டங்களைத் தொடக்கி வைத்து, ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

முதல்வரின் வருகையையொட்டி தென்காசி ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவா் பிரவேஸ்குமாா் ஆய்வு செய்தாா். அதைத் தொடா்ந்து மாவட்ட காவல் அலுவலகம், தனிப் பிரிவு அலுவலகம் , மாவட்ட குற்ற ஆவணக் காப்பகம், நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு, மாவட்டக் குற்றப்பிரிவு, தொழில்நுட்ப பிரிவு ஆகியவற்றிலும் ஆய்வு மேற்கொண்டாா். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.கிருஷ்ணராஜ் உடன் இருந்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT