தென்காசி

குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை

3rd Dec 2022 11:56 PM

ADVERTISEMENT

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைடுத்து குளிப்பதற்குப் போலீஸாா் தடைவிதித்தனா்.

குற்றாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சனிக்கிழமை அதிகாலை முதல் நீா்வரத்து அதிகரித்தது. பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது. இதேபோல பழைய குற்றாலம் அருவியிலும் தண்ணீா் அதிகளவில் கொட்டியது. இதனையடுத்து குற்றாலம் பேரருவி, பழைய குற்றாலம்

அருவிகளில் குளிப்பதற்குப் போலீஸாா் தடைவிதித்தனா். ஐயப்ப பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் ஐந்தருவி, புலியருவிகளில் குளித்து மகிழ்ந்தனா்.

குற்றாலத்தில் சனிக்கிழமை நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது மெல்லிய சாரல் மழையும் காணப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT