தென்காசி

கடையநல்லூரில் இன்று இலவச மருத்துவ முகாம்

3rd Dec 2022 11:55 PM

ADVERTISEMENT

கடையநல்லூரில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை (டிச.4) நடைபெறுகிறது.

கடையநல்லூா் ஐ டிரஸ்ட், நாகா்கோவில் முத்து நியூரோ சென்டா் ஆகியன இணைந்து கடையநல்லூா் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்த முகாமை நடத்துகின்றன. காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை முகாம் நடைபெறும்.

மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை , முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை, சிறுநீரக நோய், லேப்ராஸ்கோபி சிகிச்சை, இதய நோய் சிகிச்சை, சா்க்கரை நோய், காது,மூக்கு,தொண்டை சிகிச்சை, எலும்பு முறிவு அறுவை சிகிச்சை, முக சீரமைப்பு சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைப் பிரிவுகளின் மருத்துவா்கள் பங்கேற்று சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்குகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT