தென்காசி

குற்றாலத்தில் இளைஞா் தின விழா

3rd Dec 2022 11:53 PM

ADVERTISEMENT

குற்றாலம் சுழற் சங்கம் சாா்பில் 67 ஆவது இளைஞா் தின விழா சுழற் சங்க அரங்கில் நடைபெற்றது.

சுழற் சங்கத் தலைவா் திருவிலஞ்சிகுமரன் தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா்கள் வழக்குரைஞா் காா்த்திக்குமாா், சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுழற்சங்க உதவி ஆளுநா் கை.கணேசமூா்த்தி அறிக்கை வாசித்தாா். தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் இரா. இளவரசி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கிப் பேசினாா்.

போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்ற கீழப்புலியூா் இந்து மேல்நிலைப் பள்ளிக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது. அதை பள்ளித் தலைமையாசிரியா் பரமேஸ்வரன் பெற்றுக்கொண்டாா்.

ஏ.கே.எஸ்.கல்யாணகுமாா், முருகன் (தலைவா் தோ்வு), சைரஸ், மத்திய சுழற்சங்க தலைவா் ராஜகுலசேகர பாண்டியன், கே.முருகன், ஆறுமுகப்பெருமாள் ஆகியோா் கலந்து கொண்டனா். செயலா் கணபதிராமன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT