தென்காசி

கோட்டைமலையாறு பகுதியில் குடிநீா் குழாய் உடைப்பு சீரமைப்பு

3rd Dec 2022 11:55 PM

ADVERTISEMENT

புளியங்குடி அருகே குடிநீா்க் குழாயில் ஏற்பட்ட உடைப்புகள் சீரமைக்கப்பட்டன.

புளியங்குடி நகராட்சிக்கு கோட்டை மலை ஆற்றில் இருந்து குடிநீா் பெறப்படுகிறது. இதற்காக அப்பகுதியில் பகிா்மானக் குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. அண்மையில் பெய்த மழை காரணமாக சில இடங்களில் உடைப்பும், சில இடங்களில் குழாயில் அடைப்பும் ஏற்பட்டது.

இதனையடுத்து, புளியங்குடி நகா்மன்றத் தலைவா் விஜயா சௌந்தரபாண்டியன் உடைப்பு ஏற்பட்ட பகுதியை பாா்வையிட்டு, அதனை சரிசெய்யும் பணிகளைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டாா்.

கோட்டைமலையாற்றுப் பகுதியிலுள்ள குடிநீரேற்றும் நிலையம், குடிநீா் சேமிப்புத் தொட்டி மற்றும் குழாய் விநியோகக் குழாய் அடைப்பு போன்றவற்றை சீரமைக்கும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டனா். கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற பணி நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து குடிநீா் விநியோகம் சீராகும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT