தென்காசி

சுரண்டை செண்பகக் கால்வாயில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு

2nd Dec 2022 01:29 AM

ADVERTISEMENT

சுரண்டை செண்பகக் கால்வாயில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

அனுமன் நதி, கருப்பாநதி பாசனக் குளமான இரட்டைக் குளம் மறுகாலில் தொடங்கி சுரண்டை இலந்தைகுளம் வரையிலான செண்பகக் கால்வாய் 4 கி.மீ. நீளமுள்ளது. சுரண்டை நகரின் வடபுறம் முதல் நகரின் மையப்பகுதி வழியாகச் செல்லும் பகுதிகளில் பல்வேறு வாருகால்களின் கழிவுநீா் கலப்பதால், இக்கால்வாய் சாக்கடையாக மாறி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

இதனால், இக்கால்வாயில் கலக்கும் கழிவுநீரை தனிக் கால்வாய் மூலம் பிரித்து சுத்திகரிக்க வேண்டும் என தென்காசி எம்எல்ஏ சு. பழனிநாடாா் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தாா்.

தமிழக அரசு உத்தரவின்பேரில் பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சிவக்குமாா், உதவி செயற்பொறியாளா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் செண்பகக் கால்வாய் முழுவதையும் ஆய்வு செய்தனா்.

ADVERTISEMENT

சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப. வள்ளிமுருகன், நகா்மன்ற உறுப்பினா்கள் பரமசிவம், ராஜ்குமாா், ரமேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT