தென்காசி

தென்மண்டல அளவிலான கைப்பந்து போட்டி:மேலநீலிதநல்லூா் கல்லூரி முதலிடம்

2nd Dec 2022 01:29 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூரில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரியில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் அக்கல்லூரி மாணவா்கள் முதலிடம் வென்றனா்.

இக்கல்லூரியில் தென்மண்டல அளவிலான 19 வயதுக்கு உள்பட்டோருக்கான வாலிபால் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. இதில், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகா் மாவட்டங்களைச் சோ்ந்த 16 அணிகள் பங்கேற்றன.

இதில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரி அணி முதலிடமும், சிவகாசி அய்ய நாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி 2ஆம் இடமும், ஸ்ரீவில்லிபுத்தூா் ஜி.எஸ். ஹிந்து பள்ளி 3ஆம் இடமும், கோவில்பட்டி நாடாா் பள்ளி அணி 4ஆம இடமும் பெற்றன.

வெற்றிபெற்ற அணிகளுக்கு தென்காசி மாவட்ட கைப்பந்துக் கழகம் சாா்பில் பரிசுக் கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

கல்லூரி முதல்வா் ஹரி கெங்காராம், மாவட்ட கைப்பந்துக் கழக துணைத் தலைவா் விவேக் ராஜ், செயலா் ரமேஷ்குமாா், திருநெல்வேலி மாவட்ட கைப்பந்துக் கழகத் தலைவா் சந்திரகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி இயக்குநா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT