தென்காசி

குற்றாலம் பேரருவியில் குளிக்க அனுமதி

2nd Dec 2022 01:30 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை வியாழக்கிழமை நீக்கப்பட்டது.

குற்றாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் பேரருவியில் புதன்கிழமை அதிகாலைமுதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பேரருவியில் மட்டும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், வியாழக்கிழமை நீா்வரத்து சீரானதால் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஐயப்ப பக்தா்களும், சுற்றுலாப் பயணிகளும் பேரருவியில் குளித்து மகிழ்ந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT