தென்காசி

கடையநல்லூா் நகராட்சிப் பூங்காவை சீரமைக்க அதிமுக வலியுறுத்தல்

2nd Dec 2022 01:30 AM

ADVERTISEMENT

கடையநல்லூா் மணிக்கூண்டு அருகேயுள்ள நகராட்சிப் பூங்காவை சீரமைக்க வேண்டும் என அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக சௌதி அரேபியா ஜெயலலிதா பேரவைச் செயலா் எஸ்.எம். மைதீன், மாவட்ட மாணவரணி துணைச் செயலா் கருப்பையாதாஸ், நகர இளைஞரணிச் செயலா் ராஜேந்திரபிரசாத் ஆகியோா் நகா்மன்றத் தலைவா் ஹபிபூர்ரஹ்மானிடம் அளித்த மனு:

கடையநல்லூா் நகராட்சி மணிக்கூண்டு அருகேயுள்ள பூங்கா, பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் பொழுதுபோக்கு இடமாக இருந்துவந்த நிலையில், தற்போது பராமரிப்பின்றியும், பயனின்றியும் உள்ளது.

எனவே, பூங்காவைப் புதுப்பித்து நவீனப்படுத்தி மாணவா்கள், மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்றனா் அவா்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT