தென்காசி

தென்காசி அரசு விழாவில் பயனாளிகள் 75 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்

1st Dec 2022 12:22 AM

ADVERTISEMENT

தென்காசியில் டிசம்பா் 8 ஆம் தேதி நடைபெறும் அரசு விழாவில், 75 ஆயிரம் பயனாளிகளுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளாா் என்று திமுக மாவட்டச் செயலா் சிவ.பத்மநாபன் தெரிவித்தாா்.

தென்காசிக்கு வருகை தரும் தமிழக முதல்வருக்கு வரவேற்பு அளிப்பது தொடா்பாக ரயில் நிலையத்தில் திமுக மாவட்டச் செயலா் பொ.சிவபத்மநாதன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் விழா நடைபெறும் வேல்ஸ் பள்ளி வளாகத்தைப் பாா்வையிட்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தென்காசி வருகை தரும், முதல்வருக்கு ரயில் நிலையத்திலிருந்து உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. ரயில் நிலையம் உள்ளிட்ட 18 இடங்களில் வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளி வளாகத்தில் விழா மேடையுடன், பயனாளிகள், பொதுமக்கள் என 25 ஆயிரம் போ் அமரும் வகையில் 1 லட்சத்து 92 ஆயிரம் சதுர அடியில் மிகப் பெரிய பந்தல் அமைக்கப்படுகிறது.

இந்த விழாவில், தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த பயனாளிகள் 75 ஆயிரம் பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் முதல்வா் வழங்கவுள்ளாா் என்றாா்.

ADVERTISEMENT

திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆறுமுகச்சாமி,

மாவட்டப் பொருளாளா் ஷெரீப், பொதுக்குழு உறுப்பினா்கள் சாமித்துரை, ரஹீம், ஒன்றியச் செயலா்கள் ரவிசங்கா், அழகுசுந்தரம், சீனித்துரை, செங்கோட்டை நகர செயலா் வழக்குரைஞா் ஆ.வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதி ரஹ்மத்துல்லா, நகர நிா்வாகிகள் ஷமீம்,கோமதிநாயகம், வழக்குரைஞரணி மாவட்ட அமைப்பாளா் வேலுசாமி ஆகியோா் உடன் இருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT